உங்கள் குழந்தையின் படங்களை இணையத்தில் பகிர்கிறீர்களா? #Sharenting | Do you share your kids photos on internet

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (21/09/2017)

கடைசி தொடர்பு:19:30 (21/09/2017)

உங்கள் குழந்தையின் படங்களை இணையத்தில் பகிர்கிறீர்களா? #Sharenting

Sharenting


Sharenting (அல்லது oversharenting) என்பது சமூக வலைதளங்களில் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அதிக அளவில் பதிவிடும் பெற்றோர்களைக் குறிப்பிடும் சொல்.

80% க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனது இரண்டு வயதிற்குள்ளே ஆன்லைன் உலகில் கால் பதித்து விடுகின்றனர். சராசரியாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பே கிட்டத்தட்ட 1,500 படங்களை ஆன்லைனில் பகிர்ந்துகொள்வதாக ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

OFCOM இலிருந்து வந்த இந்த சமீபத்திய அறிக்கையில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்துகொள்வதை உறுதிப்படுத்துகின்ற அதே வேலையில், 56%க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் படங்களைப் பகிர்வதில்லை என்றும் குறிப்பிடுகிறது.

"இணையத்துடன் வளர்ந்து வரும் (Growing up with internet )" வெளியிட்ட அறிக்கையின் படி, சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் தகவலைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், சிலர் தங்கள் குழந்தைகளின் நலன்களை அவர்கள் வெளியிடும் முன் ஒருபோதும் கருதுவதில்லை என்றும் கூறுகிறது.

CBBC நியூசவுண்ட்டிற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வானது, Sharenting செய்யப்பட்ட கால் பங்கு குழந்தைகள் இந்த நடவடிக்கைகளால் பெரும் மன கஷ்டத்திற்கு உள்ளாவதாக சொல்கிறது.

பெற்றோர்கள் அடுத்தமுறை தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிரும் முன் நன்கு யோசித்துக்கொள்ளுங்கள்.