வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (22/09/2017)

கடைசி தொடர்பு:08:17 (22/09/2017)

ஓ.பன்னீர்செல்வம் போன்ற நல்ல அரசியல்வாதிகள் தமிழகத்துக்கு அவசியமா? #VikatanSurvey

ஓ.பன்னீர்செல்வம்

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் புதன்கிழமை (20.9.2017) பள்ளிக்கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சியையே பின்பற்றுகிறோம். அவருடைய வழியிலேயே தற்போதும் பள்ளிக் கல்வித்துறை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை, ஆசிரியர்களாகிய நீங்கள்தான் உருவாக்க வேண்டும்" என்றார். 

தமிழகத்தில் தற்போது என்ன மாதிரியான அரசியல் சூழல் நிலவுகிறது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுபோன்ற நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் இவ்வாறு பேசியிருப்பது குறித்த உங்கள் கருத்தை சர்வேயில் கலந்துகொண்டு பதிலளிக்கவும்.

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்