வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (21/09/2017)

கடைசி தொடர்பு:19:15 (21/09/2017)

'ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்' - மாநில சுயாட்சிக்கான விடுதலைச் சிறுத்தை கட்சி தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தப்படும் மாநில சுயாட்சி மாநாட்டில், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர் கலந்துகொண்டுள்ளனர். 

மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் :

1. அனிதா மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் உள்ளிட்டவர்களுக்கு வீரவணக்கம் 
2. மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்
3. மத்திய - மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைத்திட வேண்டும் 
4. இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைத் திணிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்
5. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் 
6. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் 
7. ஆளுநர் பதவி ஒழிக்கப்படவேண்டும்
8. மாநிலங்களுக்குப் பொருளாதார தற்சார்புநிலையை உருவாக்க வேண்டும்
9. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் 
10. மாநிலங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் 
11. நீதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் 
12.தேசியப் புலனாய்வு முகமையை(என்ஐஏ) கலைக்க வேண்டும
13. கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும்
14. இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்