கடைசிநாளில் ஜெயலலிதா !


 


                                        ஜெயலலிதா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இதேநாளில்தான் கோட்டைக்குக் கடைசியாக வந்து போனார். சென்னை விமானநிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 200 புதிய அரசுப் பேருந்துகள் தொடக்க விழா இதேநாளில் ( 2016, செப்டம்பர் 21) தான் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்கத்தான் தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா கடைசியாக வந்திருந்தார். ஒவ்வோர் அடியையும்  கவனத்துடன் வைத்து, நடுங்கும் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஜெயலலிதா நடந்து வருவதும், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வளையமிட்டு அழைத்து வருவதும் யு டியூப்களில் இன்று லட்சம் பேர்களைப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம்  நீலகிரி மாவட்ட தேயிலைத் தோட்ட  தொழிலாளர்களுக்கு வாகனங்கள், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும் இதே நாளில்தான் நடந்தது.


இன்றைய நாளைப்போன்றே அப்போலோவுக்குள் ஜெயலலிதா நுழைந்த நாளைய (செப்டம்பர்-22, 2016) நாளையும் அ.தி.மு.க. தொண்டர்களால் மறக்கமுடியாது. செப்டம்பர் 22- ம் தேதி முதல் ஜெயலலிதா மறைந்ததாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5-ம் தேதிவரை ஒவ்வொரு நாளும், தொண்டர்களின் போயஸ் கார்டனாக இருந்தது அப்போலோ மருத்துவமனைதான். இன்று அ.தி.மு.க. பல அணிகளாக உடைந்து கிடக்கிறது.  இருந்தவரையில் கட்சிக்கு நிரந்தரப் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே இருந்தார். அவர் மறைவுக்குப் பின் அந்தப் பதவி நிரப்பப் படாமல் அப்படியேதான் இன்னமும் இருக்கிறது. கட்சி, எத்தனை அணிகளாக உடைந்து கிடந்தாலும், தொண்டனுக்குப் பிடித்தது,  அதே 'கறுப்பு- சிவப்பு-வெள்ளை' வேட்டிதான், அதே இரட்டை இலைச் சின்னம்தான் அடையாளமும், உயிர் மூச்சும்... 


தொண்டனின் அதே கரை வேட்டி இன்னமும் இருக்கிறது, இரட்டை இலையைத்தான் காணவில்லை !

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!