மதுரை வைகையில் 7,000 பேர் பங்கேற்ற மாஸ் கிளீனிங்!

மதுரை வைகை ஆற்றை ஒரே நேரத்தில் 7,000 பேர் சுத்தம்செய்யும் நிகழ்ச்சி, இன்று மாலை நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள வைகை கண்காணிப்பு கமிட்டி சார்பாக நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், அனைத்து அரசுத்துறைப்பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.   இவர்களுடன்,  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் சசிதரன், கல்யாணசுந்தரம், டி.ராஜா, பாரதிதாசன், நிஷாபானு, சதீஷ்குமார், சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

க்ளீன்மதுரை

இதைப் பற்றி பேசிய கலெக்டர், ''வைகை ஆற்றைப் பராமரிப்பதற்காக, 'வைகை நதி சீரமைப்பு அறக்கட்டளை' தொடங்கப்பட்டுள்ளது. கரையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இரண்டு பக்கமும்  1 லட்சத்துக்கும் மேலாக மரக்கன்றுகள் நடவும், வைகைக்கு நீர் வரும் பாதைகளைச் சரி செய்யவும் திட மற்றும் திரவக் கழிவுகளை அகற்றவும், இந்த மாஸ் கிளீனிங் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதில், 7,000 பேர் கலந்துகொண்டுள்ளனர். இன்றே அதிக அளவிலான குப்பைகளை அகற்றியிருக்கிறோம். இது ஒரு நல்ல தொடக்கம். இனி தொடர்ந்து மாஸ் கிளீனிங் தொடரும். '' என்றார்.

முன்னதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன், கலெக்டர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஓபுளா படித்துறை முதல் குருவிக்காரன் சாலை வரை  மனிதச்சங்கிலி நடந்தது. வைகையைப் பாதுகாப்பது பற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருவதால், இப்படியொரு மாஸ் கிளீனிங்கை கலெக்டர் தொடங்கியுள்ளார் என்ற விமர்சனமும் கிளம்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!