Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளை மூட அரசு தயாரா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

மத்தியக் கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம்செய்தது குறித்த வழக்கு விசாரணையில் இருப்பதால், இப்போது எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, நிலையான ஆட்சி அமைய வேண்டும்.

அ.தி.மு.க ஆட்சியை அகற்ற தி.மு.க. முயல்கிறது. மக்களுக்கான நலத் திட்டங்களை விரைந்து அ.தி.மு.க நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி.வரி விதிப்பால் ஏழை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. வரி செலுத்த தகுதி உள்ளவர்களை, வரி விதிப்புக்குள் கொண்டு வரவே ஜி.எஸ்.டி  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தமிழக மாணவர்களுக்காக நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும். நாடு முழுவதும் 62 பள்ளிகளுக்கான அறிவிப்பு வந்தபோது 10 பள்ளிகளாவது தமிழகத்தில் வர வேண்டும் என விரும்பினேன். அதற்காக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அதன் பின்னர் வந்த ஓ.பி.எஸ், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரைச் சந்தித்து, கடிதம் கொடுத்துள்ளேன். இப்போது, நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். நவோதயா பள்ளிகள் அமைந்தால், தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். கல்வித் தரம் உயரும். நீட் போன்ற தேர்வுகளில் வெற்றிபெறுவார்கள்.

ஆரம்பக் கல்வியில், தமிழைப் படிக்க விடாமல் தடுத்தது தி.மு.க-வின் ஆட்சி. அப்போதுதான் தனியார்ப் பள்ளிகள் தாராளமயமானது. தனியார்ப் பள்ளிகளைத் தமிழகத்தில் மூடத் தயாரா?. தனியார்ப் பள்ளியில் சேர, குறைந்தது 25 ஆயிரம் பெறப்படுகிறது. எந்தக் கட்டணச் செலவும் இல்லாமல் நவோதயா பள்ளி இருக்கிறது. உணவு உறைவிடம் உட்பட. இதை வேண்டாம் என்று சொல்ல எந்தக் கட்சிக்கும் அருகதை இல்லை. 50 ஆண்டுகளில், ஓர் அரசுப் பள்ளியாவது தனியார்ப் பள்ளிக்கு நிகராக மாறி உள்ளதா? நவோதயா பள்ளிகளுக்கு  அனுமதி இல்லை என்றால், தனியார்ப் பள்ளிகளைத் தமிழகத்தில் மூட வேண்டும். தி.மு.க புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறது. கண்ணுக்குத் தெரியாத கிரிமிதான் தி.மு.க, அது இல்லாத தமிழகம் விரைவில் உதயமாகும் என்று அவர் தெரிவித்தார்.

அதன் முன்னர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் முன்னாள் திருத்தணி எம்.எல்.ஏ.வும்.முன்னாள் பா.ம.க பொதுச் செயலாளருமான ரவிராஜன் பாஜக வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement