Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனந்தபுரி எக்ஸ்பிரஸில் சந்தன மரக் கட்டைகள் கடத்தல்

சென்னை - அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சந்தன மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததின் பேரில், அனந்தபுரி ரயில் பாறசாலை ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்தபோது, ரெயில்வே போலீஸார் சோதனைசெய்தனர். அப்போது, ஒரு பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த 52 வயதான முத்துக்குட்டி மற்றும் 60 வயதான ஆறுமுகம் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து ரெயில்வே போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து, அவர்களிடம் இருந்த அட்டைப் பெட்டிகளை போலீஸார் சோதனைசெய்தபோது, அதில் 100 கிலோ சந்தன மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, முத்துக்குட்டி மற்றும் ஆறுமுகத்தை ரெயில்வே போலீஸார் கைதுசெய்து 100 கிலோ சந்தன மரக் கட்டைகளையும் பறிமுதல்செய்தனர். இவர்கள் யாரிடமிருந்து சந்தன மரக்கட்டைகளை வாங்கினார்கள்? கேரளாவில் யாருக்கு விற்க கொண்டுசென்றார்கள் என்றும், இவர்களின் பின்னணியில் உள்ள சந்தன மரக் கடத்தல் கும்பலைப் பற்றியும் ரெயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement