Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேரறிவாளன் பரோலை நீட்டிப்பதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை!

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதுகுறித்து தமிழக அரசு பரிசீலனைசெய்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


ராஜீவ் கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி பரோலில் வந்தார். அவரது தந்தை மற்றும் அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, ஒரு மாதம் பரோல் விடுப்பளித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. வீட்டில்தான் தங்கியிருக்க வேண்டும், ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்குப் பரோல் வழங்கப்பட்டது. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்துள்ள அவரை, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் நேரில் சந்தித்துப் பேசிவருகின்றனர். 

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தைச் சந்தித்து மனு அளித்திருந்தார். இதையடுத்து, பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதுகுறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement