Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’அ.தி.மு.க-வை குடும்பச் சொத்தாக மாற்ற முயற்சி நடக்கிறது’ - கொதிக்கும் கொறடா ராஜேந்திரன்

அ.தி.மு.க-வை குடும்பச் சொத்தாக மாற்ற ஒரு சிலர் முயற்சி செய்வதாக, அரசுக் கொறடா ராஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 

அ.தி.மு.க-வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிகள் இணைப்புக்கு டி.டி.வி.தினகரன் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்குப் பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையின் பேரில், கடைசி நேரத்தில் முதலமைச்சர் அணிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ., ஜக்கையன் தவிர, மீதமுள்ள 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில், அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய அவர், ‘கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும். கட்சிக்குள் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். அ.தி.மு.க, தொடர்ந்து மக்கள் பணியாற்றும். அ.தி.மு.க-வை குடும்பச் சொத்தாக மாற்ற ஒரு சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது’ என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement