Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரன் அணியிலிருந்த பெண் எம்.பி திடீர் விலகல்! முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வத்தைச் சந்தித்தார்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி., வசந்தி முருகேசன், அந்த அணியிலிருந்து விலகி, இன்று முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அந்த அணியில் இணைந்துகொண்டார்.

சசிகலாவின் தலைமையைப் பிடிக்காமல் அ.தி.மு.க-விலிருந்து விலகி, தனி அணி ஒன்றை உருவாக்கினார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா, தினகரன் சிறைக்குச் சென்ற பின்னர், முதல்வர் பழனிசாமி அணியினர், பன்னீர்செல்வம் அணியைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், 19 பேர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, 19 பேருக்கும் விளக்க நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர். அதற்கு, 19 பேரும் விளக்கமளித்தனர். விளக்கம் திருப்தியில்லை என்று கூறி, மீண்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு அவர்கள் விளக்கமளிக்கவில்லை. ஆனால், ஜக்கையன் மட்டும் விளக்கமளித்ததோடு, முதல்வர் பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். ஜக்கையனைத் தவிர்த்து, 18 பேரின் எம்.எல்.ஏ-க்கள் பதவியைத் தகுதிநீக்கம்செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சபாநாயகரின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்த அதேநேரத்தில், 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்தார். இந்த வழக்கு, தற்போது நிலுவையில் உள்ளது.

இதனிடையே, 18 பேரின் எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிபோய் உள்ள நிலையில், தினகரனின் ஆதரவு எம்.பி-க்கள், தற்போது முதல்வர் பழனிசாமி அணிக்கு மாறிவருகின்றனர். தினகரன் அணியிலிருந்த தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இல்லங்களுக்கு சென்றார். அப்போது, உங்கள் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் அவர் கூறியுள்ளார். தனது ஆதரவாளர்கள் பழனிசாமி அணியில் சேர்ந்து வருவது தினகரனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement