Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்காசி எம்.பி., எடப்பாடியைச் சந்தித்தது ஏன்?- விளக்கும் நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகள்!

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி-யான வசந்தி முருகேசன், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி

நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யாக இருப்பவர், வசந்தி முருகேசன். இவர் அ.தி.மு.க-வின் நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்துவந்த இவர், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசினார். இதனால், நெல்லை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வினரிடம் பேசியபோது, ’’அம்மாமீது விசுவாசம்கொண்டவர், வசந்தி முருகேசன். அவரது கணவர் முருகேசனும் தென்காசி எம்.பி-யாக இருந்தவர். அம்மாவின் மறைவுக்குப் பிறகு, எந்த அணியில் சேர்வது என்பது தெரியாமல் அவர் குழப்பத்தில் இருந்துவந்தார். கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை. ஆனாலும், டி.டி.வி.தினகரன் தரப்பு அணியினருடனேயே அவர் இருந்துவந்தார். 

கட்சி, பல குழுக்களாகச் செயல்படுவதால், அதிருப்தியில் இருந்துவந்தார். வசந்தி முருகேசனுக்கு நெருக்கமான காண்ட்ராக்டர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள். அவர்களின் மூலமாக ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து வசந்தி முருகேசனிடம் பேசினார்கள். ஒருவாரமாகவே அவரை சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுவந்தது. தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே, அவர் எடப்பாடி அணிக்குச் சென்றுவிட்டார். இது, எதிர்பார்த்த நிகழ்வுதான்’’ என்கிறார்கள். 

வசந்தி முருகேசன் அணி மாறியதால், டி.டி.வி தினகரன் தரப்பு எம்.பி-க்களின் எண்ணிக்கை 7-ல் இருந்து குறைந்துள்ளது. மேலும் சில எம்.பி-க்களும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவ இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதால், டி.டி.வி.தினகரன் தரப்பினர் அதிர்ச்சி  யடைந்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement