Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அமைச்சரின் உறவினர்கள் விபத்தில் பலி? - சுக்குநூறாக நொறுங்கிய அரசு வாகனம்

Coimbatore: 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, கொச்சின் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலிருந்து கோவை நோக்கி வேகமாகச் சென்றதாகக் கூறப்படும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான ஸ்கார்பியோ கார் ஒன்று, தெக்கலூர் என்னுமிடத்தில் உள்ள மேம்பாலத்தைக் கடக்கும்போது நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது.

மேம்பாலத்தில் வேகமாகச் சென்ற ஸ்கார்பியோ காரும், அரசு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலத்தின் ஓரத்தில் மோதி, பாலத்திலிருந்து கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிப்போனது. மேலும் விபத்துக்குள்ளான காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்தவர்கள் தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது. காரின் ஓட்டுநர் உட்பட இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் திருச்செங்கோடு வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கந்தசாமி (60), துணைத் தலைவர் ஜேம்ஸ் ராமு (55), இயக்குநர் கதிர்வேல் (58), ரத்தினம் (48) ஆகியோர் பலியாகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement