Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உயர் நீதிமன்றம்

டி.டி.வி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களை கட்சிக்கு எதிராக செயல்படுவதாக சட்டப்பேரவை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார் . இதனால் ஆதரவும் எதிர்ப்பும் பலமாகக் கிளம்பின. எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் தகுதி நீக்கத்திற்கு வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழகத்தில் தற்போது தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்தத் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது” என குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்றுவருவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement