வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (22/09/2017)

கடைசி தொடர்பு:19:06 (23/09/2017)

ஒயிட் அண்ட் ஒயிட் காஸ்ட்யூம்... கூலிங் கிளாஸ்... வைரலாகும் விஜயகாந்த் புதிய கெட்டப்!

அனல் பறக்கும் அடுக்கடுக்கான வசனங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கேப்டனாக அதகளம் செய்துகொண்டிருந்த விஜயகாந்த், கடந்த 2005-ம் ஆண்டு அரசியல் பிரவேசம் எடுத்தார். பின்னர் 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அவர் விருத்தாசலம் தொகுதியின் எம்.எல்.ஏ ஆனார். தே.மு.தி.க சார்பில் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தது விஜயகாந்த் மட்டும்தான். களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 10 சதவிகித வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வுக்குப் பயம் காட்டினார். இதன் பிறகு நடைபெற்ற 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த், தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டசபைக்குள் நுழைந்தார்.

விஜயகாந்த்

பின், பா.ஜ.க-வுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி, கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி ஆகிய முடிவுகள் அவருக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால், தே.மு.தி.க-வின் அரசியல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, சில மாதங்கள் உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாமல் இருக்கும், தமிழக அரசியல் வெற்றிடத்தைத்தான் நிரப்புவேன் என்று ஆக்டிவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

விஜயகாந்த்

நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிக்கப்பட்ட, மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார். இந்தநிலையில், தனது கட்சி அலுவலகத்தில் ஒயிட் அண்ட்ஒயிட் காஸ்ட்யூம் மற்றும் கூலிங் கிளாஸ் உடன் விஜயகாந்த் செல்ஃபி எடுத்துள்ள படம் ஒன்று வைரலாகி வருகிறது.