Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"நாங்கள் அனிதாவாக மாறுவோம்" - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் எச்சரிக்கை

"கோரிக்கையை ஏற்காவிட்டால் 'அனிதா'வாக மாறுவோம்" என அண்ணாமலை மருத்துவ மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்காததால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர்கள்.
  

 அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள்

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று, கடந்த 24 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அக்கல்லூரி மாணவ - மாணவிகள். இவர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிசாய்க்காததால் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள்
  

இப்போராட்டம் குறித்து மாணவர்கள், "இம்மருத்துவக் கல்லூரியை மருத்துவ கல்வி இயக்ககத்தின் கீழ் கொண்டுவந்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்துடன் இணைக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தையே இங்கு வசூலிக்கவேண்டும். இம்மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு யு.ஜி-க்கு 6 லட்சமும், பி.ஜி-க்கு 10 லட்சமும் செலவாகிறது. இதையே அரசு ஏற்று நடத்தினால், யு.ஜி-க்கு 15 ஆயிரமும், பி.ஜி-க்கு 45 ஆயிரம் மட்டுமே செலவாகும். இங்கு படிக்கும் மாணவர்கள் எல்லாம் மிடில் கிளாஸ் மாணவர்கள்தான். இதற்காக வங்கியில் லோன் கேட்டாலும் கொடுக்க மறுக்கிறார்கள். அதானால்தான் அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். பேச்சுவார்த்தை என்ற பெயரில் நிர்வாகம் எங்களை அழைத்து மிரட்டுகிறது. அதற்கு  நாங்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. இந்த மிரட்டலை எதிர்த்துதான் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளோம். தேவைப்பட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக மாறும். அப்போது எங்களில், எத்தனை பேர் அனிதாவாக மாறப்போகிறார்கள் என்று தெரியாது" என்கிறார்கள்.
                             

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement