அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கலாம்..! உயர்நீதிமன்றம் கருத்து

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 


வாகன ஓட்டிகள் கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் மூன்று மாதம் சிறை மற்றும் 500 ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எப்படி முக்கியமோ, அதேபோல வாகனம் ஓட்டுவதற்கு அசல் ஓட்டுநர் உரிமம் முக்கியம். ஓட்டுநர் உரிமத்தை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வருபவர்களுக்கும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. வாகன உரிமம் இல்லாமல் வருபவர்களை தவறாக கருத முடியாது. அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்தவர்களுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை அவசியமில்லை. ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கலாம்' என்று கருத்து தெரிவித்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!