வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (22/09/2017)

கடைசி தொடர்பு:19:45 (22/09/2017)

24-ம் தேதி புனிதநீராடினால் பலன் உண்டா? மீண்டும் புஷ்கர சர்ச்சை!

காவிரி புஷ்கரத் திருவிழா செப்டம்பர் 12 முதல் 24-ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுமென விழா கமிட்டியினர் அறிவித்திருந்தனர். அதன்படி 12-ம் தேதி தொடங்கிய விழா 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, '24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினால் பலன் உண்டா?' என்ற கேள்வி பரவ மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது.  

விழாவின் 11-ம் நாளான இன்று அதிகாலை தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் செல்வபிரதீப் புனிதநீராடினார். அதன்பின் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், பாரதிமோகன் எம்.பி. மற்றும் 10-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் புனிதநீராடி காஞ்சி சங்கராச்சாரியார்களிடம் ஆசிபெற்றனர். அப்போது வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் விழா கமிட்டியினர், "காவிரியில் திறந்துவிடும் நீரின் அளவை குறைத்ததால் துலாக்கட்டத்தில் தற்போது நீரில்லை. உங்களுக்கும் காவிரிநீரில் நீராடும் பாக்கியமில்லை. போர்வெல் நீரில்தான் பக்தர்கள் நீராடவேண்டியிருக்கிறது. எனவே, இன்னும் இரண்டு நாள்களுக்கு கூடுதல் நீர் திறக்கச்சொன்னால் புண்ணியமாக இருக்கும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். 'பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி உடனே நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றுகூறி விடைபெற்றார் அமைச்சர். 

சுவாமி24-ம் தேதி புனிதநீராடினால் பலன் உண்டா? துறவியர் சங்க ஒருங்கிணைப்பாளரும், விழாக் கமிட்டி பொறுப்பாளருமான சுவாமி வேதாந்தா ஆனந்தாவிடம் கேட்டோம், ”24-ம் தேதி காலை 9 மணியளவில் துறவியர்கள் முன்னிலையில் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தி கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.  அதன்பின் அன்னை ஞானேஸ்வரி புஷ்கர விழாவுக்காக கையில் காப்பு கட்டிய அனைத்து பெண்களிடமிருந்து காப்பு அறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் புஷ்கர விழா முடிந்தது. கொடி இறங்கும் வரை நீராடினால் புஷ்கர பலன் கிடைக்கும். அதேநேரத்தில், ஐப்பசி மாதம் முழுதுமே காவிரிக்கு புண்ணிய காலம்தான். எப்போது கங்கையில் நீராடினாலும் பலன் உண்டோ அதுபோல காவிரியிலும் பலன் உண்டு” என்று முடித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க