Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறையின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு !

 

மதுரை மத்திய தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் " தமிழகத்தில் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. பின்னர், மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு தழுவிய நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த தேர்வின் அடிப்படையில் நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் 24 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதனால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

இதனால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் சேர்ந்துள்ளார். அவர் நீட் தேர்வில் 514 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் 160-வது இடத்தையும், கேரள தகுதிப்பட்டியலில் 3129-வது இடத்தையும் பிடித்துள்ளார். கேரளாவில் இந்த மாணவியால் எம்.பி.பி.எஸ் சேர முடியாது. இதனால் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் சேர்ந்துள்ளார். இரட்டை இருப்பிடச் சான்றிதழை சரிபார்க்க சரியான முறை நடைமுறையில் இல்லை. இதனால் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களைக் கைதுசெய்யவும், இது தொடர்பான அரசாணையை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் சொல்லப்பட்டிருந்தது .

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி வேறு மாநில மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்வது தவறு. இரட்டை இருப்பிட சான்று வழங்கி மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம்" என குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறையின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறக் கூடாதும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement