வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (22/09/2017)

கடைசி தொடர்பு:15:06 (09/07/2018)

மத்திய அரசின் புரோஸ்கார் விருது பெற்ற தொண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி தேசிய அளவிலான புரோஸ்கார் விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார்.

விருதினை பெறும் தொண்டி துவக்க பள்ளி தலைமை ஆசிரியை
 

அரசுப்பள்ளிகளின் தூய்மை, சுகாதாரம், கழிப்பறை வசதி, சுற்றுப்புறத் தூய்மை மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் தூய்மை ஆகியன அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும். இதில் தமிழக அளவில் வெற்றி பெறும் பள்ளிகளுக்கு மத்திய அரசின் புரோஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதையொட்டி, இப்பள்ளிக்கு மத்திய அரசின் விருதான புரோஸ்கார் விருது கிடைத்துள்ளது.

 

புரோஸ்கார் விருது பெற்ற துவக்க பள்ளி
 

புரோஸ்கார் விருதை சென்னையில் இன்று நடந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவியிடம் வழங்கி வாழ்த்தினார். தனியார் பள்ளிக்கு நிகராக விளங்கும் தொண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 60 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பின்தங்கிய கடற்கரைப் பகுதியில் இயங்கிவரும் தொண்டி துவக்கப்பள்ளி மத்திய அரசின் விருதைப் பெற்றிருப்பதற்கு உள்ளூர் மக்களும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.