Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாம்பன் பாலத்தில் வேகத் தடையை சுட்டிக் காட்டும் எச்சரிக்கை விளக்கு அமைப்பு!

பாம்பன் சாலை பாலம் அருகே, வேகத் தடை குறித்த எச்சரிக்கை விளக்கு நெடுஞ்சாலைத் துறையினரால் அமைக்கப்பட்டது.

ராமேஸ்வரம் தீவை, நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டது அன்னை இந்திரா காந்தி பாலம் (பாம்பன் சாலை பாலம்). 30 ஆண்டுகளைத் தொட இருக்கும் இந்த பாலத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை மறைக்கும் வகையில் ரூ 2.58 கோடி செலவில் சுமார் 2.5 கி.மீ தூரம் கொண்ட பாம்பன் சாலை பாலத்தில் தார், சுண்ணாம்பு, குவாரி துகள் போன்றவற்றைக் கொண்டு ரப்பர் சாலை அமைக்கப்பட்டது.

இந்தப் புதிய சாலையில் பயணித்த வாகனங்களுக்கு கிரிப் கிடைக்காத நிலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டன. ரப்பர் சாலை அமைக்கப்பட்ட 2 மாதங்களுக்குள்ளாகவே 100-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்தன. இதையடுத்து, திருமுருகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பாம்பன் சாலை பாலம் தொடர்பான வழக்கை தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கடந்த 17-ம் தேதி பாம்பன் சாலை பாலத்தை நேரில் ஆய்வுசெய்தனர். மேலும், விபத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, பாம்பன் சாலை பாலத்தின் மீது போடப்பட்டிருந்த ரப்பர் சாலை அகற்றப்பட்டு கிரிப்புடன் கூடிய சாலை அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. மேலும், மண்டபத்தில் இருந்து வரும் பாலப் பகுதியில் வேகத் தடை ஒன்றையும் நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்தனர். இந்த வேகத் தடை அமைக்கப்பட்டது குறித்த அடையாளங்களோ, அறிவிப்பு பலகைகளோ வைக்கப்படவில்லை. இதனால் திடீரென போடப்பட்ட வேக தடையினுள் சிக்கிய டூ வீலர்கள், கார், வேன்கள், பேருந்துகள் ஆகியவை விபத்துக்குள்ளாகின.

பாம்பன் பாலத்தில் வேக தடை எச்சரிக்கை விளக்கு

 

விபத்தைத் தடுப்பதற்காக போடப்பட்ட வேகத் தடையே விபத்துகளை உருவாக்கும் தடையாக மாறியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்த நிலையில், தற்போது இந்த வேகத் தடையைச் சுட்டிக்காட்டும் வகையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ஒளிரக் கூடிய எச்சரிக்கை விளக்கை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement