Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவராத்திரியை முன்னிட்டு ஸ்பென்சர் பிளாசாவில் புகழ்பெற்ற கலைஞர்களின் நாட்டியம், இசை நிகழ்ச்சி!

க்தி விகடன், ஸ்பென்சர் பிளாசாவுடன் இணைந்து நடத்தும் ஏழு நாள் நவராத்திரி கலை விழா  சென்னையில் இன்று மாலை தொடங்கியது. 

நவராத்திரி இசை நிகழ்ச்சி


நவராத்திரியை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் ஏழு நாள் இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இன்று ( 22-ம் தேதி) தொடங்கிய இந்நிகழ்ச்சி வருகிற 28-ம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் இசை, பாரத  நாட்டியம், பஜனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

முதல் நாளான இன்று (22-ம் தேதி) மாலை 6 மணிக்கு தேஜா ஶ்ரீ மற்றும் ரூபாஶ்ரீ பங்கேற்ற கர்னாட்டிக் இசை நிகழ்ச்சி நடந்தது. நாளை (23-ம் தேதி) மாலை 6 மணிக்கு எல்.ஆனந்த் குமார் குழுவினரின் பங்கேற்று பாடும் பக்திப் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

அதேபோல, நாளை மறுநாள் (24-ம் தேதி) மாலை ஜோதியின் வயலின் இசை நிகழ்ச்சியும், 25-ம் தேதி மாலை பி.விஸ்வஜித் பிரபாகரன் பங்கேற்று பேசும் ராமநுஜர் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சியும், 26-ம் தேதி மாலை பிரவின் குழுவினரின் வாய்ப்பாட்டுக் கச்சேரியும், 27-ம் தேதி மாலை சிவசக்தி நாட்டியாலய குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், 28-ம் தேதி ராம் நகர் பக்தி பஜனா மண்டலி குழுவினரின் பஜனை நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement