Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடிப்படை வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை!

குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக்கோரி, பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அடிப்படை வசதி கோரி போராட்டம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கிறது, மேலநீலிதநல்லூர். இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு அடைப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக சாலை வசதி மிகவும் மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தெருவிளக்குகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் பெரும்பாலான விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழநீலிதநல்லூர் கிராமத்தில் சாலைவசதி சரியில்லை. அங்குள்ள குடிநீர் கிணறுக்கு மூடி இல்லாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அத்துடன், போதிய குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதையெல்லாம் சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினரின் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்ற காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போஸ்டர்

அலுவலகத்தின் முன்பாக தரையில் அமர்ந்தபடியே கோஷங்களை எழுப்பினர். இந்த தர்ணா போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் முடங்கின. போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அதில் பங்கேற்ற ஈஸ்வரி என்ற மூதாட்டி மயங்கிச் சரிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போராட்டக்களத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு நீண்டநேரம் ஆனதால், பதற்றம் ஏற்பட்டது. பின்னர், தனியார் வாகனம் மூலமாக அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அறிவித்தபடியே கலைந்து சென்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement