Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொ(நெ)ய் தீப மோசடி.! – பிரபல தேனி வீரபாண்டி கோயில் அவலம்.!

Theni: 

தேனியில் மிகப்பிரபலமான கோவில் தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில். பல நூறு வருட வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள இந்தக் கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும். கோயிலின் நுழைவாயிலைக் கடந்ததும் மைய மண்டபத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றிவைப்பதற்கான மேடை போன்ற அமைப்பு உள்ளது. தினம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதலுக்காக நெய் விளக்கு ஏற்றிவைத்து கெளமாரியம்மனை வழிபட்டுச்செல்வது வழக்கம். இதற்காக கோயிலின் உள்ளே ஒரு நெய் தீபக்கடை ஒன்று கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல், கோயில் வெளியே உள்ள கடைகளில் நெய் விளக்குகள் விற்கப்படுகிறது. கோயிலுக்கு உள்ளே உள்ள கடையைத் தவிர, மற்ற கடைகளில் நெய் விளக்கில் நெய் ஊற்றப்படுவதில்லை. மாறாக, மெழுகும் டால்டாவும் கலந்த கலவை ஊற்றப்பட்டு, ஒரு விளக்கு பத்து ரூபாய் வீதம் விற்கப்படுகிறது.

ஒரு நாளில் தோராயமாக 300 தீபங்கள் கோயிலுக்குள் ஏற்றப்படுகிறது என்றால், அதில் 250 தீபங்கள் போலியாக நெய் தீபங்களாக இருக்கிறது. பக்தியுடன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றப்படுவதோடு மட்டுமல்லாமல், கலப்பட மெழுகு மற்றும் டால்டா கலவை தீயில் எரியும்போது வெளியாகும் புகை சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், கோயில் சுவரில் எண்ணெய் படலம் உருவாகிறது. இந்த விவகாரம் இந்துசமய அறநிலையத்துறையைச் சேர்ந்த கோயில் செயல் அலுவலருக்கு தெரிந்துதான் நடப்பதாகவும், இந்த மோசடிக்கு கோயில் நிர்வாகமும் உடந்தை எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஒரு நெய் விளக்குதானே என்று அலட்சியமாக இருப்பதால்தான் நம் பாரம்பர்ய கோயில்கள் பலவற்றின் பொக்கிஷங்கள் கலவாடப்பட்டிருக்கிறது. இனியும் இந்த மோசடிக்கு கோயில் நிர்வாகமும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் துணை நிற்காமல், மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement