Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

30 இடங்கள்... கிடுக்கிப்பிடியில் மூன்று பேர்!. கரூர் ரெய்டில் தோண்டப்படும் செந்தில்பாலாஜியின் ஜாதகம்!.

கரூரில் இரண்டாவது நாளாக செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் ரெய்டின் வேகம், அடுத்த பாய்ச்சலுக்கு மாறி இருக்கிறது. 13 இடங்களில் நடந்து வந்த ரெய்டு இப்போது கிட்டத்தட்ட முப்பது இடங்களில் நடைபெறத் தொடங்கி இருக்கிறது. 


 


டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜிக்கும், மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கும் கிலி கொடுக்கும் விதமாக நேற்றில் இருந்து கரூரில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், கம்பெனிகள், நிதி நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், ஜவுளி நிலையங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டை நடத்தி வருகிறார்கள். கோவை வருவான வரித்துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் இந்த ரெய்டில், 50 வருமான வரித்துறை அதிகாரிகளால் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 13 இடங்களில் ரெய்டு நடந்தது. இன்றும் தொடர்ந்த ரெய்டு மதியம் வரை ஐந்து இடங்களில் மட்டும் நடைபெற்றது. இப்போது, அந்த ரெய்டின் தீவிரம் மெல்ல மெல்ல அதிகரித்து இப்போது கிட்டத்தட்ட 30 இடங்களில் ரெய்டு நடக்கிறது. இதற்காக, 20-க்கும் மேற்பட்ட கூடுதல் வருமான வரித்துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


இன்று மதியம் வரை, 'செந்தில்பாலாஜியையும் சும்மா பயமுறுத்த இந்த ரெய்டு நடத்தப்படுகிறது' என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால், இப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் துருவுவதை பார்த்தால், செந்தில்பாலாஜியின் ஜாதகத்தையே அலசாமல் விடமாட்டார்கள் என்றே தெரிகிறது.

 

அதுபற்றி விசாரித்தால், "நேற்றுவரை செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான 8 பேருக்குச் சொந்தமான 13 இடங்களில்தான் ரெய்டு நடத்தினார்கள். ஆனால், இப்போது அவர்களில் மூவரை மட்டுமே குறி வைத்து துருவித் துருவி விசாரித்து வருகிறார்கள். அதில் முதலாமானவர் செந்தில்பாலாஜியின் உறவினரான ஆர்.சி.தியாகராஜன். அவர் செந்தில்பாலாஜியின் அரவக்குறிச்சி தொகுதியில் நின்று, பணப்பட்டுவாடா பிரச்னையில் தேர்தல் தள்ளி வைத்தபோதும், அதன்பிறகு அதே தொகுதியில் நடந்த மறுதேர்தலின்போதும் தொகுதி முழுக்க பணப்பட்டுவாடாவை செய்தது தியாகராஜன்தான். அதனால், அவரிடம்,'தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைக்க சொல்லும் அளவுக்கு அங்கே பணம் விளையாண்டிருக்கு. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்த?. அந்த பணத்திற்கு கணக்கு என்ன?' என்று கிடுக்கிப்பிடி போட தொடங்கி இருக்கிறார்கள் அதிகாரிகள்.

அடுத்ததாக, நவ்ரங் சுப்ரமணியனை குறிவைத்திருக்கிறார்கள். செந்தில்பாலாஜிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி கிடைத்தபோது, சில நாள்களிலேயே அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டி, வாங்கல், குப்புச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டன. அதை வாங்கியவர் செந்தில்பாலாஜி. அதற்கு ஆல் இன் ஆலாக இருந்தது இந்த நவ்ரங் சுப்ரமணியன்தான். அதனால், அவரை விசாரணை வளையத்தில் வைத்திருக்கும் அதிகாரிகள் கத்தையாக ஆவணங்களை அள்ளிப்போட்டு, 'இந்த நிலங்களை வாங்க இவ்வளவு பணம் எங்கே இருந்து வந்தது?. கணக்கு சொல்லுங்கள்' என்று கேட்க,தத்தக்கபித்தக்க என்று உளறுகிறாராம் நவ்ரங்க் சுப்ரமணியன்.


கடைசி நபராக கான்ட்ராக்டர் சங்கரை ஹிட் லிஸ்டில் வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். இவர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பர். செந்தில்பாலாஜி அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளராக இருந்த நான்கு ஆண்டிகளில் கரூர் மாவட்டத்தில் அனைத்து கான்ட்ராக்களையும் எடுத்து செய்தவர் இவர்தான். அதனால், அவர் சார்ந்த ஆவணங்களை கன்முன்னே ஆட்டி கணக்கு கேட்க, ஒன்னும் ஒன்னும் எத்தனை என்று கேட்டால்கூட தெரியாது என்று சொல்பவரை போல 'எனக்கு தெரியாது; என்பதையே தேய்ந்த ரெக்கார்டாக சொல்லி வருகிறாராம். இவர்கள் மூவரையும் கைது செய்யும் லிஸ்டில் இப்போதைக்கு கொண்டு வந்திருக்கிறது வருமான வரித்துறை. இன்றோடு ரெய்டு முடியாது. நாளையும் தொடரும் என்றே தெரிகிறது" என்கிறார்கள் இந்த ரெய்டின் அசைவுகளை தங்கள் கண் அசைவுகளிலேயே வைத்திருக்கும் சிலர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement