Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமேஸ்வரம் கோயிலில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் கோயிலின் புனித தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கோயிலுக்குள் அமைந்துள்ள 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்வது குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களை ஆய்வு செய்தனர்.

 மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகிய முப்பெருமைகளை கொண்டது ராமேஸ்வரம் ஆகும். இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலின் பிரதான பிரகார பகுதிகளில் அமைந்துள்ள இந்த தீர்த்தங்களில் பக்தர்கள் தொடர்ச்சியாக நீராடி செல்வதால் அங்கு தேங்கும் நீரினால் கோயிலுக்குள் அசுத்தமான நிலை உருவாகுவதுடன், தேங்கிய நீரில் படரும் பாசிகளால் பக்தர்கள் வழுக்கி விழும் நிலையும் இருந்து வருகிறது. இதனால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தவிர்க்கும் வகையில் 1 முதல் 6 தீர்தங்களை பிரகாரத்திற்கு வெளியே கொண்டு வர உத்தரவிட கோரி சிதம்பரத்தை சேர்ந்த கீதா மற்றும் வழக்கறிஞர் வெண்ணிலா ஆகியோர்  மதுரை உயர் நீதிமன்ற கிளையில்  பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர்.

தீர்த்தமாடும் பக்தர்கள்

 இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், நிஷா பானு ஆகியோரை கொண்ட அமர்வு, கடந்த வாரம் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்  ராமேஸ்வரம் கோயிலின் புனிதத்தை பாதிக்கும் வகையிலும், அசுத்தம் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள மஹாலெட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரசுவதி, சக்கர மற்றும் சங்கு ஆகிய 6 தீர்த்தங்களையும் பிரகாரத்தின் வெளிப்பகுதிக்கு மாற்றுவது குறித்து முடிவினை  இந்து அறநிலையத்துறை ஆணையர் 2 வார காலத்தில் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேட்டரி கார்களை கோயில் நிர்வாகம் இயக்கவும், பழுதடைந்த நிலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பேட்டரி கார்களை பழுது நீக்கி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு நகராட்சி ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement