Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரியில் தேங்காய் உற்பத்தி குறைந்தது; விலை ஏறியது!

கன்னியாகுமரி மாவட்டத்தில், தென்னை விவசாயம் அதிகம். இங்கு விளையும் தேங்காய்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் வறட்சி ஏற்பட்டது. அதன் காரணமாக, பல பகுதிகளில் தென்னை மரங்கள் கருகின. இதனால், தேங்காய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே 1000 தேங்காய் உற்பத்தி செய்யபட்ட இடத்தில் இப்போது 400 தேங்காய்கள் தான் கிடைக்கிறது. அதிலும் தேங்காய்களின் எடையும் குறைவாகவே உள்ளது .தேங்காய் உற்பத்தி குறைந்ததை தொடர்ந்து தேங்காய் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் 20 முதல் 24 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது தேங்காய் விலை உயர்ந்து  ஒரு கிலோ தேங்காய் 42 ரூபாய் முதல் 44 ருபாய் வரை விற்க படுகிறது. நாகர்கோவிலில் ஒரு கிலோ  தேங்காய் 42 ரூபாய் முதல் 48 ருபாய் வரை விற்கப்படுகிறது. தேங்காய் விலை உயர்ந்து இருந்தாலும்  தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது ஒரு மாதமாக குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேங்காய் உற்பத்தி குறைந்த தென்னை மரங்களில் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கைகளில்  விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்களில் உற்பத்தி அதிகரிக்க 1 வருடம் வரை ஆகும். அதுவரை குமரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைவாகவே இருக்குமாம். அதனால் விலையும் குறைய வாய்ப்பு இல்லை.தேங்காய் உற்பத்தி குறைந்து உள்ளதால் ஏற்றுமதியும் குறைந்து உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement