Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’ஜெயலலிதாவைப் பார்த்து பேசியதாக பொய்தான் சொன்னோம்’ - திண்டுக்கல் சீனிவாசன் பல்டி

’ஜெயலலிதாவை பார்த்துப் பேசியதாகப் பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓப்பனாகப் பேசியுள்ளது அ.தி.மு.க-வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மதுரை பழங்காநத்தத்தில்  இன்று  இரவு நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு,  விஷயத்துக்குள்  வந்தார். '' டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகரில்  வாக்கு சேகரிக்கும்போது, சசிகலா படத்தை போடாதது ஏன்? ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றபோது  நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்க விடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாக, அவர் இட்லி சாப்பிட்டதாக  அப்போது பொய் சொன்னோம்,

அதற்கு, இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல்செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை, அனைத்தும் விசாரணைக் கமிஷனில் தெரியவரும்'' என்று அதிரடியாகப் பேசியதால், மேடையில் இருந்தவர்கள் நெளிந்தார்கள். தொடர்ந்து, '' டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க-வை ஒழிக்க தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளார். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால், தி.மு.க டெபாசிட்கூட வாங்க முடியாது'' என்று பேசிவிட்டுச் சென்றார். 
     சசிகலாவை வம்பில் மாட்டிவிட  இப்படிப் பேசியிருந்தாலும்,  ''ஜெயலலிதாவின் மரணத்தில் அனைத்து அமைச்சர்களும் சசிகலாவுடன் சேர்ந்து பொய் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பொய் சொன்னதன்மூலம் மக்களை ஏமாற்றியுள்ளனர்'' என்று   குற்றச்சாட்டுகள்  எடப்பாடி அரசை நோக்கித் திரும்பியுள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement