Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமல்ஹாசனை முதலில் கவுன்சிலராகச் சொல்லுங்கள்..! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கு

'நடிகர் கமல்ஹாசனை முதலில் கவுன்சிலராகச் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 


நடிகர் கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக ஆளும் அரசையும் அ.தி.மு.க அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். மேலும், தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும், விரைவில் தனிக்கட்சி தொடங்க எண்ணம் இருப்பதாகவும் தனது கருத்தை வெளிப்படுத்திவருகிறார். கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அமைச்சர்கள் தொடர்ந்து எதிர்க்கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'பணம் செலவழித்து எடுக்கப்படும் படத்தில் வேண்டுமானால் கமல் முதல்வராக நடிக்கலாம். முதலில் அவரை கவுன்சிலாரகச் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்று விமர்சனம் செய்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தார்கள். எல்லாரும் காணாமல் போய்விட்டார்கள். கமலால் எந்தத் தாக்கமும் வராது' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement