Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தி குமரி டு ஸ்ரீநகர் நடைப்பயணம்!

மகளிர் சமத்துவம்

Tirunelveli: 

பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தி குமரி முதல் ஸ்ரீநகர் வரை நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் பெண்ணுக்கு, நெல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவில், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் சமத்துவத்தை நிலைநாட்டவும் ஸ்ருஸ்டி பக்‌ஷி என்ற பெண், குமரி முதல் ஸ்ரீநகர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார். டெல்லியின் நொய்டா பகுதியைச் சேர்ந்த இவர், பவ் என்ற அமைப்பின் நிறுவனர். மகளிருக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும்,  அவர்கள் பொருளாதார ரீதியாகவும் அறிவியல்பூர்வமாகவும் முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடைப்பயணமாகச் சென்று வலியுறுத்திவருகிறார். 

நடைப்பயணம்

நெல்லைக்கு வந்த ஸ்ருஸ்டி பக்‌ஷி மற்றும் அவரது குழுவினருக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நடைப்பயணம்குறித்து அவர் கூறுகையில், ’’நமது நாட்டில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துவருவது கவலை அளிக்கிறது. அதனால், பெண்களின் நலனுக்காக இந்த நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். 

குமரியில் எனது நடைப்பயணம் தொடங்கப்பட்டது. நாடுமுழுவதும் 3,800 கி.மீ தூரம் பயணிக்க இருக்கிறேன். மொத்தம் 260 நாட்கள் எனது பயணம் இருக்கும். வழியெங்கும் உள்ள கிராம மக்களைச் சந்தித்துவருகிறேன். ஒரு நாளைக்கு 20 முதல் 30 கி.மீ தூரம் நடந்து செல்கிறேன். வழியில் உள்ள கிராமப் பெண்களுக்கு, பொருளாதாரரீதியில் முன்னேற்றம் அடைவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசுகிறேன். அவர்கள், அறிவியல்ரீதியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக இன்டர்நெட் பயன்படுத்துவதுகுறித்தும் விளக்குகிறேன். 

ஸ்ரிஸ்டி பக்‌ஷி

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக கிராமப்புறப் பெண்களைச் சந்தித்துவருகிறேன். அவர்களுக்கு வரதட்சணைக் கொடுமை, மதுவால் ஏற்படும் கொடுமைகள், உரிய உரிமைகள் இல்லாத நிலைமை போன்றவை இருப்பதாகத் தெரியப்படுத்தினார்கள். பெண்களுக்கு, பொருளாதாரக் கல்வி, தலைமைப் பண்பு, சுகாதாரம், தூய்மை, டிஜிட்டல் பயன்பாடு போன்றவைகுறித்து விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இந்தப் பயணத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு, மகிழ்ச்சி அடைய வைப்பதாக உள்ளது’’ என்றார், உற்சாகமாக. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement