வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (23/09/2017)

கடைசி தொடர்பு:11:18 (23/09/2017)

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?

பேரறிவாளனின் பரோல், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பேரறிவாளன்
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க, கடந்த 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோல் விடுப்பு மட்டுமல்லாது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்துவருகின்றனர். 

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தைச் சந்தித்து மனு அளித்திருந்தார். இந்நிலையில் பேரறிவாளனின் பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளையுடன் பேரறிவாளனின் பரோல் முடிவடையும் நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க