Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் உடல் எடை குறைப்பு சிகிச்சையின்போது பெண் உயிரிழப்பு..! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் எடையைக் குறைப்பதற்கான சிகிச்சையிலிருந்த பெண், தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அழகேசன். அவரது மனைவி வளர்மதி. அவருக்கு வயது 47. அவர்களுக்கு சதிஷ்குமார், சரண்யா, சங்கீதா என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். 150 கிலோ எடையுடன் வளர்மதி அவதிப்பட்டுள்ளார். அவர் உடல் எடையை குறைப்பதற்காக கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு ஒன்பது அறுவைச் சிகிச்சைவரை செய்ததாக கூறப்ப்படுகிறது. இந்த நிலையில், சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துள்ளார். தவறான சிகிச்சையின் காரணமாகத் தான் தனது மனைவி உயிரிழந்ததாக, அவரது கணவர் அழகேசன் என்பவர் குற்றம்சாட்டிவருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'உடல் எடை குறைப்பு போன்ற விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். உடல் எடையைக் குறைப்பதற்கு பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவ முறைகளை பின்பற்றலாம்' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement