வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (23/09/2017)

கடைசி தொடர்பு:13:24 (23/09/2017)

பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து அரசாணை வெளியிடப்படவில்லை..! அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

'பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை' என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க, கடந்த 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோல் விடுப்பு மட்டுமல்லாது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்துவருகின்றனர். நாளையுடன் ஒரு மாத கால பரோல் முடிவடைகிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு மாத காலத்துக்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சட்டஅமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. தற்போது, அந்தத் தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறுத்துள்ளார். 'பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து இதுவரை தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார்.