Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செந்தில்பாலாஜி உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு: 1.20 கோடி பறிமுதல்

கரூரில், மூன்றாவது நாளாக நடந்துவரும் ரெய்டு, செந்தில்பாலாஜின் ஆணி வேர்களாக இருக்கும் அவரது உறவினர்களையும், ஆதரவாளர்களையும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது. 


 

டி.டி.வி.தினகரன் அணியில், ஆக்டிவ் எம்.எல்.ஏ-வாக இருந்த செந்தில்பாலாஜி மீது, ஏற்கெனவே அவர் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக்கழகத்தில் பணி நியமன ஆணை வழங்குவதாகச் சொல்லிப் பெற்ற நான்கரை கோடி மோசடி வழக்கு, இப்போது பூதாகரமாகி, அவரை சிறைக்குள் தள்ள துடித்துக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் குடகு ரெசார்ட்ஸில் இருக்கும் அவர், எந்நேரம் வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் என்றும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படலாம் என்றும் பரபர பேச்சு கிளம்பியிருக்கிறது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.


 

இந்தச் சூழலில்தான், கோவை வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த வியாழக்கிழமை காலை முதல் செந்தில்பாலாஜி உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், கம்பெனிகளில் ரெய்டு நடத்திவருகிறார்கள். முதல் நாள், எட்டு அணிகளாகப் பிரிந்து 13 இடங்களில் ரெய்டு நடத்தினார்கள். இரண்டாம் நாள் மதியம் வரை ஆறு இடங்களில் மட்டும் ரெய்டு நடத்தினார்கள். ஆனால், நேற்று இரவு 30 இடங்களில் ரெய்டு நடப்பதாகச் சொல்லப்பட்டது. இன்று, மூன்றாவது நாளாகவும் தொடரும் ரெய்டில், செந்தில்பாலாஜியின் பினாமிகள் பெயரில் வாங்கிய, கணக்கில் வராத 50 கோடி சொத்துக்கான ஆவணங்களையும்,1.20 கோடி பணத்தையும் கைப்பற்றியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், கரூர் லைட்ஹவுஸ் பகுதியில், செந்தில்பாலாஜியின் நெருங்கி நண்பரான 'தாரணி' சரவணன் என்பவர் நடத்திவந்த நிதி நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதிகாரிகள் சீல் வைத்த பிறகுதான், அங்கே நிதிநிறுவனம் இயங்கிவந்தது அருகில் உள்ளவர்களுக்கே தெரிந்தது. 'முறைகேடாகச் சம்பாதித்த பணத்துக்கு கணக்குக் காட்ட, சும்மா ஷோவுக்காக  நடத்தப்பட்ட நிதிநிறுவனம் இது. வருமான வரித்துறை அதிகாரிகள், சகலத்தையும் அலசிட்டாங்க. அதான், சீல் வெச்சுட்டாங்க' என்கிறார்கள் விவரம் அறிந்தோர். ரெய்டு தொடர்ந்து நடக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement