Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சென்னை ஐ.ஐ.டி மாணவர்..!

சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர் ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர், பிரேம் அவினாஷ். அவர், சென்னை ஐ.ஐ.டி-யில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல்  இன்ஜினீயரிங் படித்துவந்துள்ளார். கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், கல்லூரி வளாகத்தில் பலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதைக் கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவர், சிறுமியர் உயிரிழந்துவரும் நிலையில், சென்னையிலும் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement