Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் என்னவானது? - ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம், அறிவிப்பு  நிலையிலேயே இருப்பதாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக, அவர் சிகிச்சைபெற்று வந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். அ.தி.மு.க தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வமும் இதே கோரிக்கையை முன்வைத்தார். இந்த நிலையில், 'ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார். நீதிபதி நியமனம்குறித்து இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

இதுதொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை, ஆணைய நடவடிக்கை அறிவிப்பு நிலையிலேயே இருக்கிறது. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடக்கம் முதலே தி.மு.க வலியுறுத்திவந்தது. விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்களே தவிர, எந்த நீதிபதி விசாரிக்கப்போகிறார் என்ற தெளிவான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement