தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இரட்டைக் குடியுரிமை அரசாணைக்குத் தடை!

தமிழக மருத்துவக் கல்லூரிகளில், வெளிமாநில மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக, குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறையின் அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை வித்தித்துள்ளது. இந்த வழக்கைத் தாக்கல்செய்த  தி.மு.க எம்.எல்.ஏ., பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் செய்தியாளர்களிடம், '' நான் தொடர்ந்த வழக்கில்,  இரட்டை இருப்பிடச் சான்று வழங்கலாம் என்ற அரசாணைக்கு, இடைக்காலத் தடை விதித்துள்ளது. நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பாதித்துள்ளதால் எதிர்க்கிறேன். அதேநேரம், நீட் தேர்வுமூலம் மாணவர்களைத்  தேர்ந்தெடுப்பதிலும் பல குழப்பங்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டவே, இந்த வழக்கைத் தாக்கல் செய்தேன். வெளிமாநில மாணவர்கள், இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் பெற்று, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளார்கள். இதனால், தமிழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பிடிஆர்பி

நீட் தேர்வில் குறைவான ரேங் எடுத்த கேரள மாணவி, இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்மூலம் தமிழகத்தில் சேர்ந்துள்ளார். இது, பெரும் அநீதியாகும். இரட்டை இருப்பிடச் சான்றிதழை ஆய்வுசெய்ய சரியான நடைமுறைகள் தமிழகத்தில் இல்லை. அதனால், இந்த அரசாணையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும், நீட் தேர்வே சரியில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. அனைத்து வசதிகளும் உள்ளவன் முன்னேறினால் அது பெரிய விஷயம்  அல்ல.   அனிதா போன்ற மாணவிகள்  நல்ல மதிப்பெண்  பெற்றும் நினைத்த உயர் கல்வியில் சாதிக்க முடியவில்லை என்றால், சமுதாயம் எப்படி முன்னேறும்?  ஒரு மருத்துவரை உருவாக்க, ஒரு கோடி வரை அரசு செலவழிக்கிறது. அந்த வாய்ப்பை  வெளி மாநில மாணவர்கள் கைப்பற்றுவது நியாயமில்லை. சில அரசியல்வாதிகள் சிபாரிசுகளில் வந்துவிட்டு, இப்போது எங்களுக்கு அறிவுரை  சொல்கிறார்கள்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!