பின்லாந்தில் சென்னைப் பொறியாளர் மர்ம மரணம்!

பின்லாந்தில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மாயமான பொறியாளர் ஹரி சுதன், அங்குள்ள கடற்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

ஹரி சுதன்


பின்லாந்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில், சென்னையைச் சேர்ந்த ஹரி சுதன், கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். நண்பர்களுடன் கடந்த 8-ம் தேதி வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பின்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றைத் தொடர்புகொண்டு, அவரது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக, பின்லாந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஹரி சுதனைத் தேடிவந்தனர். 

இந்த நிலையில், காணாமல்போன ஹரி சுதனின் உடல், ஹெலின்ஸ்கி பகுதியில் உள்ள ஹெர்னஸரி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பின்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை, பின்லாந்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியும் உறுதிசெய்துள்ளார்.  ‘ஹெர்னஸரி கடற்கரையில், இளைஞர் ஒருவரின் சடலத்தை பின்லாந்து போலீஸார் நேற்று கண்டுபிடித்தனர். விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஹரி சுதனின் உடல் அது என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பின்லாந்து போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!