Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா மாறி வருகிறது' - மருத்துவர்கள் வருத்தம்

''உலகம் முழுவதும் 34 லட்சம்பேர் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயினாலும் அதனால் உடல்நல சிக்கல்களாலும் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உலகத்தின் சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா மாறிவருகிறது'' என்று மதுரையில் நடந்த கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள்  வருத்தத்துடன் தெரிவித்தனர். சர்க்கரை நோயினால் விளையும்  பொருளாதார சிக்கல்கள் குறித்த கருத்தரங்கு, மதுரை தமுக்கம் மைதானத்தில்  இன்று நடைபெற்றது. 

சர்க்கரை


மதுரை மருத்துவக்கல்லூரியின் முதல்வர்  மருதுபாண்டியன் பேசும்போது, "ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்ற நோயாக நீரிழிவுநோய் உருவெடுத்துவருகிறது. இதற்கான சிகிச்சைகளை அரசாங்க மருத்துவமனைகளில் எளிதில் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவரும் 30 வயதிற்குமேல் நீரிழிவிற்கான பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும். குறிப்பாக கர்ப்பிணிதாய்மார்கள் அவசியம் நீரிழிவுபரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.  பேறுகாலநேரத்திலும், பிரசவத்திற்குபின் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது. அனைவரும் நீரிழிவுப் பரிசோதனை செய்வதன் மூலம் நோயினை கட்டுப்படுத்தலாம்" என்றார். 

நீரிழிவு மருத்துவ நிபுணர் சங்குமணி, ''மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறைகளுமே நீரிழிவுநோய்க்கான காரணங்கள். இயந்திரங்களை  சார்ந்து வாழும் இக்காலத்தில் உடற்பயிற்சிகளையும், உடல்உழைப்பையும் கட்டாயமாக்கி கொள்ளவேண்டும். ஒருநாளுக்கு 5 முதல் 6 கி.மீ. வேகமான நடைபயிற்சியால்  கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடியும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை  சராசரி சர்க்கரை நோயின் அளவை பரிசோதிக்கவேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிக்கவேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இரத்தத்தில் கொழுப்பின் அளவையும் ஆண்டிற்கு ஒருமுறை நரம்பு பரிசோதனைகளை செய்து, நீரிழிவு நோயை கண்காணித்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்" என்றார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement