Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இறுதிக்கட்ட பணிகள்!

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 133  அடியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உப்பு காற்றால் சேதம் அடையாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை  பூசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த  ஆண்டு சிலை பராமரிப்பு பணிகளுக்காக 1.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரசாயன காலவை பூசும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக  கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி தொடங்கி 140 அடி உயரத்துக்கு இரும்பு பைப்புகள் அமைக்கும் பணி நடந்தது. தற்போது  நான்காவது கட்டமாக  திருவள்ளுவர்  சிலை முழுவதும் காகித கூழ் ஒட்டும் பணி நடந்தது

கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் இந்த பணி பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் மழை விட்டு விட்டதால்  தொழிலாளர்கள், தீவிரமாக  திருவள்ளுவர்  சிலையில் காகித கூழ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த பணியும் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்னும் ஒரிரு நாட்களில் சுத்தமான தண்ணீரை கொண்டு திருவள்ளுவர்  சிலையை சுத்தம்  செய்யும்பணி நடை பெற இருக்கிறது. பின்னர் மீண்டும் ஒரு முறை காகித கூழ் ஒட்டும் பணி நடை பெறும். அதனை தொடர்ந்து மீண்டும் திருவள்ளுவர்  சிலை சுத்தமான நீரைக் கொண்டு கழுவியை பின்னரே ரசாயன கலவை பூசும் பணி தொடங்க இருக்கிறது. இந்த பணிகள் அக்டோபர் மாதம் 14-ம் தேதி நிறைவடையும் என சொல்லப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 15 நாட்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement