Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாகர்கோவிலில் லேப்ராஸ்கோப்பி  அறுவை சிகிச்சை பயிற்சி முகாம்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  மகப்பேறு மருத்துவ மகளிர் சங்கம் சார்பில் லேப்ராஸ்கோப்பி மூலம்  அறுவை சிகிச்சை செய்வதை முதல்முறையாக நேரடியாக ஒளிப்பதிவு செய்து, அதன்மூலம் மகளிர் மருத்துவர்களுக்கான  பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள்  கலந்துகொண்டனர்.

கர்பப்பை, கரு முட்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் மட்டுமல்ல குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கும் அதற்கான காரணத்தை கண்டறியவும் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறை பயன்படுகிறது.

லேப்ராஸ்கோப்பி சிகிச்சை பெற்றவர்கள் விரைவில் எழுந்து நடமாட முடிகிறது. அதாவது குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்காக நடத்தப்படும் குழாய் பரிசோதனை மற்றும் பொதுவாக மேற்கொள்ளப்படும் கரு முட்டை பை கட்டிகள், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைகளுக்கு பின் இரண்டு நாள்களிலேயே வீட்டு வேலைகளை தானே செய்யவும் மற்றும் அலுவலகத்திற்கு சென்று பணி மேற்கொள்ளும் அளவிற்கான உடல் வலிமையையும் இந்த சிகிச்சை மூலம் பெறலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் மகப்பேறு மருத்துவ மகளிர் சங்கம் சார்பில் லேப்ராஸ்கோப்பி மூலம்  அறுவைசிகிச்சை செய்வதை முதல்முறையாக நேரடியாக காண்பித்து, அதன் மூலம் மருத்துவர்கள் எவ்வாறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது  என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை முறையை நேரில்  திரையில் பார்த்த மருத்துவர்கள் இந்த சிகிச்சை முறையில் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement