ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் கருத்து; சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை | In jayalalitha's death Stalin requests CBI enquiry

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (24/09/2017)

கடைசி தொடர்பு:02:35 (24/09/2017)

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் கருத்து; சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை

அ.தி.மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் பார்த்ததாக பொய் சொன்னோம் என அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் கூறியதை சுட்டிக்காட்டி, இதில் உடனடியாக சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை விடுத்துள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். 

ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் நலமாக இருக்கிறார், இன்று இட்லி சாப்பிட்டார், நாங்கள் அவரை பார்தோம் என அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “நாங்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவே இல்லை. சசிகலா குடும்பம் எங்களை அனுமதிக்கவே இல்லை. அப்போது பொய் சொன்னதற்காக இப்போது மன்னிப்பு கோருகிறோம்” என்று பேசினார். 

சசிகலா குடும்பத்தை வைத்து தான் இந்த கருத்தை அமைச்சர் கூறி இருந்தாலும், தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வராக இருப்பவர்கள் வரை இந்த விவகாரத்தில் சம்பந்த பட்டு இருப்பதால், அ.தி.மு.க வினர் மத்தியிலுமே இந்த விவகாரம் பெரும் சலசலப்பை உருவாக்கியட்து. இந்நிலையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார். 

அதில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் கூறியிருக்கிறார். மூன்று தொகுதி இடைதேர்தலில் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஒ. பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் இலாகாவை கவனிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க ஜெயலலிதா கையெழுத்து போட்டதும், கைரேகை வைத்ததும் எப்படி?” என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது தொடர்பாக உடனடியாக சி.பி.ஐ விசாரணை தேவை எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.