Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமரிமாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதன்மை பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலர்களுக்குக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமினை  மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் தொடங்கிவைத்தார்.  இதில் கலந்து கொண்ட  முதன்மை பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக வெள்ளத்தில் பாதிப்படைவோரை மீட்டு தங்க வைக்க,  தற்காலிக முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அங்கு, தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மருத்துவ உதவிக்கு தொடர்பு கொள்ள மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ பணியாளர்களின் விபரம் மற்றும் மருத்துவ முகாம் உள்ள இடம் போன்றவைகளை தொலைபேசி எண்ணுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான தகவல்களை, உரிய அலுவலர்களிடம் தெரிவிக்க, அவர்களது தொடர்பு எண்களை, தயாராக வைத்திருக்க வேண்டும். முக்கிய தகவல்களை பரிமாற, ஒலிபெருக்கி, தண்டோரா மற்றும் கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை கருவிகளை பயன்படுத்துதல் தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மீட்பு பணிக்கு தேவையான அளவில், வாகனங்கள் மற்றும் அதற்கு தேவையான எரிபொருள் இருப்பு வைத்திருக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement