’சசிகலா குடும்பம் கூறச்சொன்னதைதான் வெளியே சொன்னோம்!’ - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அமைச்சர்

’ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து சசிகலா குடும்பம் கூறச்சொன்னதைதான் வெளியே சொன்னோம்’ என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் சீனிவாசன்
 

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ’ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றபோது  நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாக, அவர் இட்லி சாப்பிட்டதாக  அப்போது பொய் சொன்னோம்’ என பேசி சர்ச்சையை கிளப்பினார். 

ஜெயலலிதாவை பார்த்துப் பேசியதாகப் பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டிடிவி தினகரன், ’பயத்தால் அமைச்சர்கள் மாறி மாறிப் பேசுகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவிக்காகத்தான் இப்படிப் பேசுகிறார்' என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சீனிவாசன் ‘ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து சசிகலா குடும்பம் கூறச்சொன்னதைதான் வெளியே சொன்னோம். மூத்த அமைச்சர் என்ற முறையில் உண்மையை கூறவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!