Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"வேண்டும் என்றே அரசியல் ஆக்குகிறார்கள்!" - கீழடி விவகாரத்தில் மற்றொரு கோணம்

கீழடி

ந்த ஒரு ஆராய்ச்சியும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டால்தான் அது நிலைதன்மை பெறும். முக்கியமாக தொல்பொருள் ஆராய்ச்சியின் விளைவுகள் வாழ்ந்து வரும் நமது சமூகத்தின் வரலாற்றுப் பதிவுகளாக இருக்கின்றன. கீழடி தொல்பொருள் ஆய்வு குறித்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தரங்கு திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொல்லியல் துறை தலைவர் சு.ராசவேலு, பல அரியத் தகவல்களைக் காணொலிமூலம் மாணவர்களுக்கு விளக்கினார். அப்போது அகழ்வாராய்ச்சித் தொடர்பாக அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

 “கீழடி ஆய்வு எந்த அளவுக்குச் சென்றுள்ளது? அங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களைக் கொண்டு அங்கேயே மியூசியம் அமைக்க முடியுமா?”

''ஆய்வு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. எந்த ஓர் ஆய்வுக்கும் கால நேரம் கணக்கிட முடியாது. அது, இன்னும் சில வருடங்கள் நீளலாம் அல்லது இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துகூடப் போகலாம். ஆகவே, அகழாய்வுக்கு நேரம் காலமெல்லாம் கிடையாது. அதை, தோராயமாகச் சொல்லவும் கூடாது. மியூசியம் அமைப்பது பற்றி கேட்டீர்கள்... ஏன் அமைக்க முடியாது. அதன் பெயர் ‘சைட் மியூசியம்’. நிறைய இடங்களில் இதுபோல அகழ்வாராய்ச்சி நடந்த இடத்துக்கு அருகிலேயே, கிடைத்த பொருள்களைக் கொண்டு மியூசியம் அமைத்திருக்கிறார்கள். மேலும், கீழடியில் நிலத்தின் உரிமையாளர் நிலத்தைக் கொடுத்தால் தாராளமாக அங்கு மியூசியம் அமைக்க முடியும்''.

“கீழடி ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவு கிடைக்கிறதா... ஆய்வில் ஏன் இவ்வளவு அரசியல்?”

''ஆய்வுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு தாராளமாக ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதெல்லாம் தவறான செய்தியாகும். இந்த ஆய்வில் அரசியல் என ஒன்றுமில்லை. தினம்தோறும் வேலைகள் சுமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒருசிலர் மிகைப்படுத்தி கூறுவதாலும், எழுதுவதாலும் அதில் அரசியல் சாயம் தெளிக்கப்படுகிறது, அவ்வளவே. ஆய்வு எந்த இடையூறுமின்றித் தொடர்ந்து நடக்கும்; நடக்க வேண்டும்; நடக்கும் என நம்புகிறோம்''.

கீழடி, keezhadi

 “கீழடி ஆய்வு, கிறிஸ்து பிறப்புக்கும் பழைமையானதா? சிந்து சமவெளி நாகரிகத்தைக் மிஞ்ச வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்களே.. அதன் உண்மையான காலம்தான் என்ன?”

''கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், கூடுதலாகச் சில புராதனப் பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆய்வின் முடிவில்தான் காலத்தைக் கணிக்க முடியும். சிந்து சமவெளி நாகரிகத்தைக் கீழடி மிஞ்சுவதற்கு வாய்ப்பில்லை என எண்ணுகிறேன். ஆனால், சிந்து சமவெளி மக்களும், கீழடியில் வாழ்ந்த மக்களும் ஒரே இன மக்கள்தான். நிச்சயமாக கீழடி ஆய்வு, கிறிஸ்து பிறப்பைவிடப் பழைமையான ஒன்றுதான்''.

“ 'கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்படும் பொருள்களில், போதிய அளவு வெளிப்படைத்தன்மை இல்லை' எனச் சிலர் கூறுகிறார்களே?”

''அதற்காகக் கண்டுபிடிக்கும் அனைத்துப் பொருள்களையும் அனைவருக்கும் காட்டிவிட முடியுமா என்ன? கீழடியில் ஒளிவுமறைவுக்கு இடமே இல்லை. தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கீழடிக்கு வருகிறார்கள். அந்தப் பொருள்களையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் செல்கிறார்கள். சந்தேகம் இருந்தால் நாளைக்குக்கூடக் கீழடிக்குச் சென்று நீங்கள் பாருங்கள். நான், சொல்வதை உங்களால் நம்ப முடியும்''.

 “கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட குழிகளை மண்ணைக்கொண்டு மூடியதாகச் சில தகவல்கள் வருகிறதே... அது உண்மையா?''

''அது, மிகவும் தவறான செய்தி. ஆதிச்சநல்லூரில் கூடத்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வை நிறைவு செய்துவிட்டு அந்த இடங்களை மண்ணைக்கொண்டு மூடினார்கள். பின்னர் 2004-ல் மீண்டும் தோண்டி அகழாய்வு செய்யவில்லையா? தேவையான பொருள்களை எடுத்தபின்னர், அந்த இடத்தை மூடுவதுதானே சரியானதாகும். ஒருவேளை, மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டுமென்றால் தோண்டிக்கொள்ளலாம். ஏனென்றால், ‘தேவையான பொருள்களை எடுத்த பின்னர் நிலத்தின் உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைத்துவிடுவோம்' என்று சொல்லித்தானே ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படிதானே நடந்தாக வேண்டும்.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement