Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அல்சைமர் நோய் விழிப்புஉணர்வுக்காக சென்னையில் மாரத்தான்!

ல்சைமர் நோய் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னையில் மாரத்தான் போட்டி நடந்தது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர். 

மாரத்தான் ஓட்டம்


அல்சைமர் நோய் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 21-ம் தேதி ‘உலக அல்சைமர் விழிப்புஉணர்வு தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, இன்று (செப்-24-ம் தேதி)  ‘தி பர்ப்பிள் ரன்’ (The Purple Run) என்ற பெயரில் மாரத்தான் விழிப்புஉணர்வு ஓட்டத்துக்கு, டாக்டர் விகடன் ஆதரவுடன் சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மால் (The Forum Vijaya Mall) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அல்சைமர் விழிப்பு உணர்வு மாரத்தான்

சென்னை  பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு உயர்நிலைப் பள்ளியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மாரத்தான் தொடங்கியது.   ஓட்டத்தை ஃபோரம் விஜயா மால் பொதுமேலாளர் உமேஷ் ஐயர், பிரம்மஞான சபையின் (The Theosophical Society) சர்வேதச செயலாளர் மார்த்தா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 21 கி.மீ., ஆகிய பிரிவுகளில் நடந்த ஓட்டத்தில், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர். இதேபோல, ஃபோரம் விஜயா மால்கள் செயல்படும் பெங்களூரூ, மங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் இன்று விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றன.

மேலும் படங்களுக்கு....

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement