வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (24/09/2017)

கடைசி தொடர்பு:12:50 (24/09/2017)

திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  பிரம்மோட்சவத்  திருவிழா  நேற்று கோலகமாக தொடங்கியது. அக்டோபர் 1ஆம்  தேதி வரை நடைபெரும் இந்த பிரம்மோட்சவத்தைக் காண பல்வேறு இடங்களிலிருந்து  பக்தர்கள் திருப்பதி செல்கின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நடைபாதை யாத்திரை மேற்கொண்டு திருப்பதி பயணிக்கின்றனர்.

வேலூர்

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று  தங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கிய பக்தர்கள், தங்கள் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர். புரட்டாசி மாதம் மற்றும் பிரம்மோட்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறதால்திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்று தெரிகிறது.