Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகங்கை மக்களை மிரட்டும் டெங்கு! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்.

 டெங்கு மரணம்


 சிவகங்கை மாவட்டத்தில் சுகாதராத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு  மற்றும்  மர்மகாய்ச்சலுக்கு மட்டும் பத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போயிருப்பது மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுமருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக வரும் நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றார்கள். ஒரு சில தனியார்மருத்துவமனைகளும் இரத்தபரிசோதனை மையங்களும் டெங்குகாய்ச்சல் இருப்பவர்களுக்கு டெங்குஎன உண்மையான அறிக்கை கொடுக்கிறார்கள்;. ஆனால் அரசுமருத்துவமனைகளில் காய்ச்சல் என்று போய் சேர்ந்தால் இரத்தபரிசோதனை முடிவுகளை அறிவிப்பது இல்லை.  நோயாளிகள் யாருக்கும் என்ன காய்ச்சல் என்பதை டாக்டர்கள் தெரிவிக்காமல் மறைத்து அதற்கு ஒரு பெயர் சூட்டுகிறார்கள். அந்த பெயர் தான் மர்மகாய்ச்சல்.

டெங்கு என சொல்ல தயக்கம் ஏன்?

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி , காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்புவனம், காளையார்கோவில் போன்ற பகுதிகளில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று காய்ச்சல் குணமடையாததால் அரசு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
 புதுவயல் பகுதியை சேர்ந்த சூரியா  வனஜா, அடுத்ததாக கண்டனூரை சேர்ந்த மாயாண்டி,  காரைக்குடியை சேர்ந்த அசாருதீன், திருப்பத்தூர் அருகேயுள்ள திருவுடையார்பட்டியை சேர்ந்த முத்து,  சோழபுரம் அருகேயுள்ள நாலுகோட்டையை சேர்ந்த கருப்பையா, இளையான்குடி அருகேயுள்ள சிங்கத்துரைபட்டியை  சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்றனர். தனியார் மருத்துவமனைகளில் அவர்களிடம் இருந்து ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இப்போது அவர்கள் அனைவருமே அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்கு மரணங்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்த பாலசண்முகம் மனைவி ப்ரியா வயது 29. இவருக்கு கடந்தசில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிழந்து போனார். மானாமதுரை பகுதியில் இதுவரை நான்கு பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.  மானாமதுரையைச்சேர்ந்தவர் மீனாட்சி. இவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . டெங்குகாய்ச்சல் காரணமாக இவர்  மரணமடைந்ததாக தனியார் மருத்துவமனை சொல்லி இருக்கிறது. மானாமதுரை அருகே காட்டு உடைகுளத்தை சேர்ந்த முத்துகுமார் என்பவரின் மகன்  பள்ளி மாணவனான மருது சிவகங்கை அரசு மருத்துவமனையில் கடுமையான காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சைமுறை திருப்தி அளிக்காததால் உயிருக்கும் மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

காரைக்குடி பர்மா காலணியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் காரைக்குடி மக்கள் மன்றத்தின் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர். இவருக்கு டெங்கு காய்ச்சல் வந்ததை மறைத்து மர்ம காய்ச்சல் என தனியார் மருத்துவமனையும் அரசுமருத்துவமனையும் அறிக்கை கொடுத்தது. இவருக்கு வெளியில் எடுத்த  ரத்த பரிசோதனை டெங்கு என உறுதிசெய்தது.

தொடர்போரட்டத்திற்கு பிறகு டெங்கு காய்ச்சலால் தான் இறந்தார் என மருத்துவமனை அறிக்கை கொடுத்தது. அதன்பிறகு கோட்டையூரை சேர்ந்த அமுதா 55 டெங்குகாய்ச்சலால் இறந்துபோனார். காரைக்குடி கணேசபுரத்தை சேர்ந்தவர் கார்த்தி இவர் மர்மகாய்ச்சலால் இறந்து போனார். சிவகங்கை மாவட்டம் முழுவதும் டெங்கு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஆமைவேகத்தில் நகர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளுர் அமைச்சர் எம்எல்ஏக்கள் யாரும் மக்கள் டெங்கு பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement