தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாள்களுக்கு 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரத்தில் வரும் 26ம் தேதி வெங்கடேஷ் பண்ணையாரின் 14வது நினைவுதினம் கடைபிடிக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் 3 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘’ தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் கிராமத்தில் வரும் 26ம் தேதி வெங்கடேஷ் பண்ணையாரின் 14வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதால் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும் நாளை 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் 27ம் தேதி புதன்கிழமை காலை 6மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம்  முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த நாட்களில் பொதுமக்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கோ வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் ஏதும் எடுத்து வருவதற்கும் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பொதுமக்களை வாடகை வாகனங்கள் மூலம் நினைவு தினத்தில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக செல்லும் வாகனங்கள்  ஆகியவற்றிற்கு பொருந்தாது.’’ என தெரிவித்துள்ளார்.   

https://www.vikatan.com/news/tamilnadu/103137-phone-the-number-to-compliant-about-breaking-traffic-rules.html     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!