வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (24/09/2017)

கடைசி தொடர்பு:18:35 (24/09/2017)

குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த  இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்ய வில்லை. இதனால் அணைகளில் இருந்து கூடுதலாக நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. பாசன தேவை அதிகமாக இருப்பதால் கூடுதலாக நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில்  இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 401 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு 400 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து 261 கன அடியும் தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இன்றும் காலை முதல் வெயில் அடித்து வருகிறது. மலையோரப் பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கூட சாரல் மழை இல்லை.

தற்போதைய நிலவரப்படி  பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 23.60  அடியாக இருந்தது. அணைக்கு 386 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர் மட்டம் 47.15 அடியாக இருந்தது. அணைக்கு 289 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. சிற்றார் 1- ல் 5.35 அடியும், சிற்றார் 2-ல் 5.45 அடியும், பொய்கை அணையில்  மைனஸ் 3,30 அடியும் மாம்பழத்துறையாறு அணையில் 29.04 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க