கேரள நிதி அமைச்சருக்கு ,லாட்டரியில் 500 ரூபாய் பரிசு

கேரளா மாநிலத்தில் வீதிக்கு வீதி லாட்டரி சீட்டு விற்பனை சூடாக நடந்துக் கொண்டிருக்கிறது. கிட்ட தட்ட அங்குள்ள குடிசை தொழில் போல பலரும் லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். அதிலும் மாற்றுத் திறனாளிகள், கண் பார்வையற்றவர்கள் என பலரும் பஸ் ஸ்டேண்ட்களிலும், ரயில்வே ஸ்டேஷன் அருகிலும் நின்று லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில்  விழாக் காலங்களில் கோடி கணக்கில் பணமும் நகையும் லாட்டரி சீட்டில்  பரிசாக அறிவிக்கப்படும்.

அதனால்  விற்பனை அமோகமாக நடைபெறும்.கேரள அரசு லாட்டரி சீட்டு குலுக்கலையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் கேரள அரசின் ஒணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குலுக்கல் நடைபெற்றது. அதில் முதல் பரிசாக 10 கோடி மலப்புர மாவட்டம் பரப்பனல்காடியை சேர்ந்த முஸ்தபா என்கிற தேங்காய் வியாபாரிக்கு கிடைத்தது. இந்நிலையில், அதே கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில், கேரள அரசின் நிதி துறை அமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு   ரூபாய் 500 பரிசாக விழுந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்  மலப்புரம் மாவட்டம் திருவூரில் நடந்த மாவட்ட தொழிலாளர் கூட்டுறவு சங்க விழாவில் கலந்துக் கொண்டார். அப்போது அவருக்கு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஓணம் புத்தாடையும், ஓண பம்பர் லாட்டரி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. அந்த லாட்டரிக்குதான் தற்போது ரூபாய் 500 பரிசு விழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!